ட்ரெண்டிங்

தலைமறைவாக உள்ள பதிவாளரைப் பணியிடை நீக்கம் செய்க!

 

தலைமறைவான சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் பதிவாளர் தங்கவேலுவை சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

 

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் ஆசிரியர் சங்க நிர்வாகிகள் கூட்டறிக்கையை வெளியிட்டுள்ளனர். அதில், தலைமறைவாக உள்ள பல்கலைக்கழகத்தின் பதிவாளர் தங்கவேல், துணை பேராசிரியர் சதீஸ் ஆகிய இருவரையும் சஸ்பெண்ட் செய்ய வேண்டும். பணியாளர் நடத்தை விதிகளுக்கு முரணாக நடந்ததால் இருவரையும் பணியிடை நீக்கம் செய்ய வேண்டும். ஜனவரி 02- ஆம் தேதி முதல் பதிவாளர் மற்றும் துணை பேராசிரியர் ஆகியோர் எவ்வித அறிவிப்பும் இல்லாமல் விடுப்பில் உள்ளனர்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இதனிடையே, பல்கலைக்கழக பதிவாளர் தங்கவேல், துணை பேராசிரியர் சதீஸ், பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ராம் கணேஷ் ஆகியோர் தலைமறைவாகியுள்ளனர். தலைமறைவான 3 பேரையும் பிடிக்க தனிப்படை அமைத்து சேலம் மாநகர காவல்துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.