பெரியார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ஜெகநாதன் ஜாமீன் மனுவை ரத்துச் செய்யக்கோரும் மனு வரும் ஜனவரி 19- ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.
அரசின் அனுமதியின்றி நிறுவனம் தொடங்கி மோசடி செய்ததாக கருப்பூர் காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில், சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ஜெகநாதன் கைது செய்யப்பட்டார். அதைத் தொடர்ந்து, நீதிமன்றத்தால் நிபந்தனைகளுடன் கூடிய ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
சாட்சிகளைக் கலைக்க வாய்ப்புள்ளதால், சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ஜெகநாதனின் ஜாமீனை ரத்துச் செய்யக்கோரியும், வழக்கை உடனடியாக விசாரிக்க வேண்டும் என்று கோரியும் சென்னை உயர்நீதிமன்றத்தில் சேலம் மாநகர காவல்துறை தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்த நிலையில், வழக்கை வரும் ஜனவரி 19- ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக உயர்நீதிமன்ற நீதிபதி நிர்மல்குமார் தெரிவித்துள்ளார்.


-SXgDfGgJfO.jpg)