மேட்டூர் அருகே ராமன் நகரில் மின்கம்பத்தின் மீது கார் மோதி விபத்து. ஒரு மணி நேரம் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதால் பொதுமக்கள் சிரமம்..
மேட்டூரில் இருந்து சேலம் நோக்கி சென்ற கார் நேற்று இரவு 2 மணிக்கு ராமன் நகர் அருகே வந்தபோது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரத்தில் இருந்த மின் கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் மின்கம்பம் இரண்டாக முறிந்து விழுந்தது மேலும் காரின் முன் பகுதி சேதம் அடைந்தது. மின் கம்பம் முறிந்து விழுந்ததால் அப்பகுதியில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதால் பொதுமக்கள் சிரமம் அடைந்தனர்.காரை நிறுத்திவிட்டு ஒட்டுனர் தப்பி ஒடிய நிலையில் விபத்து காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், மற்றும் மின்வாரிய அதிகாரிகள் உடைந்த மின் கம்பத்தை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்தனர்.
விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் விபத்தை ஏற்படுத்தி விட்டு தப்பி ஓடிய கார் ஓட்டுநரை போலீசார் தேடி வருகின்றனர்.இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

-VHdMhTFUHT.jpg )
