ட்ரெண்டிங்

தொடர்ந்து அதிகரிக்கும் வெப்பம்....பொதுமக்கள் செய்ய வேண்டியவை என்ன?

 

கோடைகாலத்தில் பொதுமக்கள் வெயிலின் தாக்கத்திலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள பொது சுகாதாரத்துறையின் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றிட வேண்டும் என ஆட்சியர் டாக்டர்.பிருந்தாதேவி அறிவுறுத்தியுள்ளார். 

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் டாக்டர்.பிருந்தாதேவி தெரிவித்துள்ளதாவது, கோடைகாலம் தொடங்கியுள்ள நிலையில் வெயிலின் தாக்கம் தொடர்ச்சியாக அதிகரித்து வருகிறது. சூழ்நிலையில் நம்மையும், நம் குடும்பத்தினரையும் உயர் வெப்பநிலையில் இருந்து பாதுகாத்துக் கொள்ள பொது சுகாதாரத்துறையின் உரிய வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டுமாய் கேட்டுக்கொள்ளப்படுகிறது. பொதுமக்கள் கோடை வெயிலின் நேரடி வெப்ப அலைகளில் இருந்து பாதுகாத்திட குடை தொப்பி உள்ளிட்டவற்றைப் பயன்படுத்த வேண்டுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

குறிப்பாக, பொதுமக்கள் பகல் 12 மணி முதல் மாலை 3 மணி வரை அத்தியாவசியத் தேவையின்றி வெளியில் செல்வதைத் தவிர்க்க வேண்டுமென தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டு வருகிறது. அதேபோன்று, வயதானவர்கள் குழந்தைகள், கர்ப்பிணி தாய்மார்கள், உடல் நலம் பாதிக்கப்பட்டோர் மேற்குறிப்பிடப்பட்ட அதிக வெயில் நேரங்களில் வெளியில் செல்வதைத் தவிர்த்திட வேண்டும், வெப்பநிலை அதிகரித்து வருவதால் பகல் நேரங்களில் பொதுவெளியில் நிறுத்தப்பட்டுள்ள வாகனங்களில் குழந்தைகள் மற்றும் செல்லப்பிராணிகளை விட்டுச் செல்வதைத் தவிர்த்திட வேண்டும். 

மேலும், பள்ளி விடுமுறை நாட்களில் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை கவனமுடன் கண்காணித்துக்கொள்ள வேண்டும் வெயில் காலத்தில் குழந்தைகளுக்கு உண்டாகும் சின்னம்மை, தட்டம்மை, பொண்ணுக்கு வீங்கி போன்ற நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. அவ்வாறான சூழ்நிலையில் குழந்தைகளுக்கு நீர் சார்ந்த உணவு வகைகள் அதிகம் எடுத்துக்கொள்ள செய்ய வேண்டும். தேவையேற்பட்டால் மருத்துவர்களை அணுகி பொதுமக்கள் கோன வெப்பத்தின் தாக்கத்திலிருந்து பாதுகாத்துக் கொள்ள அதிக அளவிலான நீர் பருக வேண்டும். தாகம் இல்லை என்றாலும் போதிய அளவிலான நீர் பருக வேண்டும். சூடான பானங்கள் மற்றும் குளிர்பானங்கள் பருகுவதைத் தவிர்த்து, அதிக அளவில் மோர், இளநீர்ப்பு மற்றும் மோர் கலந்த அரிசிக் கஞ்சி உப்பு கலந்த எலுமிச்கை பழச்சாறு ஆகியவற்றைப் பருகலாம். 

மேலும், கோடை காலத்தில் குளிர்ந்த நீரில் குளிப்பது மிகுந்த நன்மையை அளிக்கும் வியர்வை எளிதாக வெளியேறும் வகையில் மிருதுவான தளர்ந்த சுற்றோட்டமான பருத்தி ஆக அமிய மோண்டும். மிக முக்கியமாக நிறந்த வெளியில் வோ செய்யும் போது தலையில் பருத்தி துணி அல்லது துண்டு அணிந்து வேலை செய்ய வேண்டும். சூரிய வெப்பம் அதிகமாக உள்ள திறந்த வெளியில் வேலை செய்யும் போது களைப்பு, தலைவலி தலைசுற்றல் போன்ற அறிகுறிகள் ஏற்பட்டால் உடனடியாக வெப்பம் குறைவாக உள்ள குளிர்ந்த இடத்திற்குச் செல்லலாம். மயக்கம் உடல் சோர்வு, அதிக அளவு தாகம், தலைவலி, கால், மணிக்கட்டு அல்லது வயிற்றில் வலி ஏற்பட்டால் அருகிலுள்ள நபரை உதவிக்கு அழைக்கலாம் மிகவும் சோர்வாகவோ, மயக்கமாகவோ இருந்தால் மருத்துவ உதவியை நாட வேண்டும். 

மேலும் மருத்துவ உதவிகள் மற்றும் கூடுதல் தகவல்களுக்கு 104 என்ற மாநில அளவிலான அரசின் கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு பயன்பெறலாம். இவ்வாறு ஆட்சியர் தெரிவித்துள்ளார்.