ட்ரெண்டிங்

குறைந்து வரும் மேட்டூர் அணையின் நீர்மட்டம்.... கவலையில் விவசாயிகள்!

மேட்டூர் அணையின் நீர்மட்டம் நாளுக்கு நாள் குறைந்து வருவது டெல்டா மாவட்ட விவசாயிகளிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது. 

காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை குறைந்ததாலும், கர்நாடகாவில் தென்மேற்கு பருவமழை குறைந்ததாலும், சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் அணைக்கான நீர்வரத்து மிக சொற்பமாக வினாடிக்கு 305 கனஅடியில் இருந்து 154 கனஅடியாகக் குறைந்துள்ளது. அதேநேரம், டெல்டா பாசனத்திற்காக அணை மின்நிலையம் வழியாக வினாடிக்கு 2,000 கனஅடி தண்ணீரும், சுரங்கம் மின்நிலையம் வழியாக வினாடிக்கு 8,000 கனஅடி தண்ணீரும் என மொத்தமாக 10,000 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. 

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 62.49 அடியில் இருந்து 61.26 அடியாகக் குறைந்துள்ளது. அணையில் நீர்இருப்பு 25.63 டி.எம்.சி. ஆக உள்ளது. 

அணையின் நீர்மட்டம் தொடர்ந்துக் குறைந்து வருவதால், டெல்டா மாவட்ட விவசாயிகள் கவலை அடைந்துள்ளார். அத்துடன், பருவமழையை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கின்றனர்.