ட்ரெண்டிங்

பெண்கள் நன்றாக இருந்தால் சொசைட்டியே நன்றாக இருக்கும்- நடிகை நயன்தாரா பேச்சு!

 

சேலம் சங்ககிரியில் உள்ள விவேகானந்தா மகளிர் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற femi 9 நிகழ்ச்சியில் நடிகை நயன்தாரா மற்றும் அவரது கணவரும், இயக்குநருமான விக்னேஷ் சிவன் ஆகியோர் கலந்து கொண்டு மாணவிகள் மத்தியில் சானிடரி நாப்கின் குறித்தும், அது தொடர்பான விழிப்புணர்வையும் ஏற்படுத்தினர்.

 

விஜய் டிவி நீயா? நானா? புகழ் கோபிநாத், முக்கிய பிரமுகர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்ட நிகழ்ச்சியில், கல்லூரியின் மாணவிகள் என 1,000- க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

 

நிகழ்ச்சியில் பேசிய நடிகை நயன்தாரா, "உங்கள் முன்னாடி நிற்பதில் பெருமையாகவும், மன நிறைவாகவும் இருக்கிறது. அந்த பெருமைக்கும், மனநிறைவுக்கும், சந்தோஷத்துக்கும் காரணம் நீங்கள் எல்லாரும் தான். சானிடரி நாப்கின் குறித்த விழிப்புணர்வு அனைத்து பெண்களையும் சென்றடைய வேண்டும். சுயநலத்துக்கு பின்னால் உள்ள பொதுநலம் எனது வணிகத்தை நியாயப்படுத்துகிறது.

 

எனக்கு பின்னால் எனது கணவர் விக்னேஷ் சிவன் உள்ளார்; அவரை சந்தித்து முதலே எனக்கு துணையாகவே உள்ளார். யாரும் என்னை கேள்வி கேட்கவில்லை என்றால், அதுதான் பெரிய விஷயம் என்று நினைத்தேன். ஆனால் இதுமட்டுமல்லாமல் இதோடு ஏன் நிறுத்துகிறீர்கள் என கேட்பவர்தான் விக்னேஷ் சிவன்.

 

"சுயநலத்துக்கு பின்னால் பொதுநலன் உள்ளது; சானிட்டரி நாப்கின் குறித்த விழிப்புணர்வு நாட்டில் உள்ள அனைத்து பெண்களுக்கும் சென்றடைய வேண்டும். இது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்துவதே எங்கள் நோக்கம். பெண்கள் நன்றாக இருந்தால் சொசைட்டியே நன்றாக இருக்கும். ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின்னால் ஒரு பெண் உள்ளது போல, ரொம்ப சாதித்த பெண்களுக்கும், ரொம்ப மகிழ்ச்சியாக உள்ள பெண்களுக்கும் பின்னாலும் கண்டிப்பாக ஒரு ஆண் உள்ளனர்" எனத் தெரிவித்தார்.

 

நிகழ்ச்சி முடிவில் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள், நயன்தாரா- விக்னேஷ் சிவன் தம்பதி தங்களது உயிர் ருத்ரோனில் N சிவன் , உலக் தெய்வேக் N சிவன் குழந்தைகளுடன் இருக்கும் தங்க ஜரிகையைக் கொண்டு வரையப்பட்ட அழகிய ஓவியத்தைப் பரிசாக வழங்கினர்.