ட்ரெண்டிங்

ஸ்விக்கி, சோமேட்டோ ஊழியர்களுக்கு இலவசம் பெட்ரோலை வழங்கிய சூர்யா நற்பணி மன்றத்தினர்

ஸ்விக்கி, சோமேட்டோ ஊழியர்களுக்கு இலவசம் பெட்ரோலை வழங்கிய சூர்யா நற்பணி மன்றத்தினர்

நடிகர் சூர்யாவின் 48- வது பிறந்தநாளையொட்டி, அவரது நற்பணி மன்றத்தினர் மற்றும் ரசிகர்கள் தமிழகம் முழுவதும் கேக் வெட்டியும், மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கியும் கொண்டாடி வருகின்றனர். 

அந்த வகையில், சூர்யா நற்பணி மன்றத்தின், சேலம் மாவட்ட தகவல் தொழில்நுட்ப தலைமை சார்பில், மாதம் ஒரு நற்பணி சமூகத்திற்கு என்ற கருத்தை முன்னிறுத்தி ஆதரவற்றவர்களுக்கு உணவு வழங்கி வருகிறது. அந்த வகையில், ஏழாவது மாத நற்பணியில் முதல் நற்பணியாக ஆசிரமத்தில் உள்ள ஆதரவற்றக் குழந்தைகளுக்கு இன்று காலை உணவு வழங்கப்பட்டது.

அதேபோல், சூர்யா நற்பணி மன்றத்தின் சேலம் மாவட்ட இளைஞரணி தலைவர் ஜெயக்குமார் மற்றும் நிர்வாகிகள் சார்பில், உணவுகளை விநியோகம் செய்யும் 25 ஸ்விக்கி, சொமேட்டோ ஊழியர்களுக்கு இலவசமாக பெட்ரோல் வழங்கப்பட்டது.