ட்ரெண்டிங்

இந்த குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூபாய் 1,000 வழங்கப்படும் என அறிவிப்பு!

 

தமிழகத்தில் உள்ள அனைத்து குடும்ப அட்டைகாரர்களுக்கும் ரூபாய் 1,000 வழங்கப்படும் என்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

 

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தமிழகத்தில் உள்ள அனைத்து அரிசி குடும்ப அட்டைத்தாரர்கள், சர்க்கரை குடும்ப அட்டைத்தாரர்கள், பொருளில்லா குடும்ப அட்டைத்தாரர்கள் என அனைத்து வகை குடும்ப அட்டைத்தாரர்களுக்கும் 1,000 ரூபாயுடன், ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழுக்கரும்பு ஆகியவை அடங்கிய பொங்கல் தொகுப்பு வழங்கப்படும். இதற்காக தமிழக அரசு ரூபாய் 2,000 கோடியை ஒதுக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.