ட்ரெண்டிங்

சேலத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் – மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் ஆய்வு !!!

 

சேலம் மாநகராட்சி கொண்டலாம்பட்டி மண்டலம்.53,54 வார்டுக்குட்பட்ட பகுதிகளுக்கு சேலம்,நேரு கலையரங்கம் மற்றும் நகர்ப்புறத்தை ஒட்டியுள்ள கிராம ஊராட்சி, தாசநாயக்கன்பட்டி பகுதிக்கு ஸ்ரீ விஜயமஹால் திருமண மண்டபம் ஆகிய இடங்களில் இன்று (அக்.03) நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்,பிருந்தாதேவி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.  

மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது:

உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் கீழ் சேலம் மாவட்டத்தில் 15.07.2025 அன்று முதல் வரும் நவம்பர் மாதம் வரை நகர்ப்புறப்பகுதிகளில் 168 முகாம்களும் மற்றும் ஊரகப் பகுதிகளில் 264 முகாம்களும் என மொத்தம் 432 சிறப்பு முகாம்கள் திட்டமிடப்பட்டு பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு தீர்வுகள் காணப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

தமிழ்நாட்டில் உள்ள கடைகோடி மக்கள் அன்றாடம் அணுகும் அரசுத்துறைகளின் சேவைகள் அவர்கள் வசிக்கும் பகுதிக்கு அருகாமையிலேயே சென்று வழங்குவதே இத்திட்டத்தின் நோக்கமாக உள்ளது எனவும்,

அதேபோல் உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தில் பெறப்படும் மனுக்கள் அனைத்திற்கும் 45 நாட்களுக்குள் தீர்வு காண வேண்டுமென முதலமைச்சர் உத்தரவிட்டு உள்ளதாகவும்.

சேலம் மாவட்டத்தில் 15.07.2025 முதல் 30.09.2025 வரை நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்களில் பல்வேறு துறைகளின் சார்பில் மொத்தம் 110,948 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டுள்ளன. இதுதவிர கலைஞர் மகளிர் உரிமைத் தொகை கோரிக்கை விண்ணப்பமாக மொத்தம் 121,892 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.

இதன் தொடர்ச்சியாக, இன்று (அக்.03) சேலம் மாநகராட்சி கொண்டலாம்பட்டி மண்டலம், 53, 54 வார்டுக்குட்பட்ட பகுதிக்கு சேலம், பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள நேரு கலையரங்கத்திலும், 

இடங்கணசாலை நகராட்சி, 6. 7. 8. 15,வார்டுக்குட்பட்டவர்களுக்கு கே.கே நகர் காவியா திருமண மண்டபத்திலும், வீரக்கல்புதூர் பேரூராட்சி, 8,முதல்,15 வது வார்டுக்குட்பட்டவர்களுக்கு ராமன்நகர்.சமுதாயகூடத்திலும், நகர்ப்புறத்தை ஒட்டியுள்ள கிராம ஊராட்சி, தாசநாயக்கன்பட்டி பகுதிக்கு கெஜல்நாயக்கன்பட்டி, ஸ்ரீ விஜயமஹால் திருமண மண்டபத்திலும், அயோத்தியாப்பட்டணம் ஊராட்சி ஒன்றியம். குள்ளம்பட்டி, சுக்கம்பட்டி, வலசையூர் பகுதிகளுக்கு வலசையூர் பெரியசாமி உடையார் மண்டபத்திலும், பெத்தநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றியம். தும்பல்,பாப்பநாயக்கன்பட்டி பகுதிகளுக்கு பாப்பநாயக்கன்பட்டி செல்வ நாராணன் கோவில் அருகில் உள்ள சமுதாயக்கூடத்திலும் காடையாம்பட்டி ஊராட்சி ஒன்றியம், கெஜல்நாயக்கன்பட்டி, தாராபுரம் பகுதிகளுக்கு தாராபுரம், செம்மாண்டபட்டி சாலை, காமாட்சி அம்மன் திருமண மண்டபத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடைபெற்றது.

 

அந்தவகையில் இன்று (அக்.03) சேலம் மாநகராட்சி, கொண்டலாம்பட்டி மண்டலம்,53,54 வார்டுக்குட்பட்ட பகுதிகளுக்கு சேலம்,நேரு கலையரங்கம் மற்றும் நகர்ப்புறத்தை ஒட்டியுள்ள கிராம ஊராட்சி, தாசநாயக்கன்பட்டி பகுதிக்கு ஸ்ரீ விஜயமஹால் திருமண மண்டபம் ஆகிய இடங்களில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமினை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு முகாமில் பொதுமக்களுக்கு தேவையான குடிநீர் வசதிகள்,இருக்கை வசதிகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் அமைக்கப்பட்டுள்ளது. குறித்தும் ஆய்வு மேற்கொண்டனர்.

 

மேலும், உங்களுடன் ஸ்டாலின் முகாம்களில் வழங்கிய மனுக்கள் மீது நடவடிக்கை மேற்கொண்டு 4 நபர்களுக்கு புதிய சொத்து வரி விதித்தலுக்கான உத்தரவு ஆணைகளும், 1 நபருக்கு சொத்து வரி பெயர் மாற்றத்திற்கான உத்தரவு ஆணைகளும் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர்,டாக்டர் பிருந்தாதேவி. தெரிவித்தார்.

 

இந்த ஆய்வின்போது சேலம் மாநகராட்சி மேயர்.இராமச்சந்திரன், சேலம் மாநகராட்சி ஆணையாளர் திரு இளங்கோவன், சேலம் வருவாய் கோட்டாட்சியர்,கொண்டலாம்பட்டி மண்டல குழுத் தலைவர், கொண்டலாம்பட்டி மண்டல உதவி ஆணையர் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.