சேலம் மாவட்டம், கல்வராயன் மலைப்பகுதியில் காய்ச்சி விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 2,200 லிட்டர் சாராய ஊறல்களை காவல்துறையினர், கைப்பற்றி அழித்தனர்.
கல்வராயன் மலைப்பகுதியில் சாராயம் காய்ச்சப்படுவதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில், கச்சிரப்பாளையம் காவல் ஆய்வாளர் தலைமையிலான காவலர்கள், கல்வராயன் மலைப்பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, பல்வேறு பகுதிகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2,200 லிட்டர் சாராய ஊறல்களை கைப்பற்றினர். அவற்றை சம்பவ இடத்திலேயே கொட்டி காவல்துறையினர் அழித்தனர். இது குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


