சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே கருப்பூரில் அமைந்துள்ள பெரியார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக ஜெகந்நாதன் மீண்டும் பதவியேற்றுக் கொண்டார்.
துணைவேந்தர் ஜெகந்நாதன் பணியைத் தொடரும் கோப்பில் கையொப்பமிட்டு பதவியேற்றுக் கொண்டார். நேற்றுடன் (ஜூன் 30) பதவி முடிந்த நிலையில், ஜெகந்நாதனுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பதவி நீட்டிப்புச் செய்து உத்தரவிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, ஊழல் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ள நிலையில் துணைவேந்தர் ஜெகந்நாதனுக்கு பதவி நீட்டிப்பு வழங்கிய ஆளுநர் ஆர்.என்.ரவியைக் கண்டித்தும், துணைவேந்தருக்கு வழங்கப்பட்டப் பதவி நீட்டிப்பை நீக்கக்கோரியும், துணைவேந்தர் மற்றும் முன்னாள் பதிவாளர் தங்கவேலு ஆகியோர் மீது தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்கக் கோரியும் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் மற்றும் தொழிலாளர்கள் சங்கம் கூட்டாக அறிவித்துள்ளனர்.


