ட்ரெண்டிங்

மேட்டூர் அணையின் படித்துறை சேதம்....பொதுப்பணித்துறைக்கு கோரிக்கை!

 

சேலம் மாவட்டம், மேட்டூர் அணை முனியப்பன் கோவில் அருகே அணை மதகு கால்வாயில் பக்தர்கள் நீராடுவதற்கு ஆங்காங்கே படித்துறைகள் கட்டப்பட்டுள்ளன. இதில், 15 ஆண்டுகளுக்கு முன்பு மட்டம் பகுதியில் கட்டப்பட்ட கான்கிரீட் படிக்கட்டுகள் நாளடைவில் சேதமடைந்துள்ளது.

 

சேதமான படிக்கட்டுகளின் உள்பகுதியில் பொருத்திய கம்பிகள் துருப்பிடித்து வெளியே நீண்டுள்ளன. சில இடங்களில் கம்பிகள் கூர்மையாக நீண்டு இருப்பதால், பக்தர்கள் காலில் குத்தி ரத்தக் காயத்தை ஏற்படுத்துகின்றன. இதனால் மட்டம் பகுதியில் நீராடச் செல்லும் பக்தர்கள் ஏராளமானோர் கடும் அவதியடைந்துள்ளனர்.

 

படித்துறையை உடனடியாகச் சீரமைக்க, பக்தர்கள், சுற்றுலாப் பயணிகள் உள்ளிட்டோர் பொதுப்பணித்துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.