ட்ரெண்டிங்

ஹைதராபாத்- கோட்டயம் இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என அறிவிப்பு!

 

ஹைதராபாத்- கோட்டயம் இடையே இருமார்க்கத்திலும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

 

இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில், வரும் டிசம்பர் 02, 09 ஆகிய தேதிகளில் ஹைதராபாத்தில் இருந்து கோட்டயத்திற்கும், மறுமார்க்கத்தில், டிசம்பர் 04, 11 ஆகிய தேதிகளில் கோட்டயத்தில் இருந்து ஹைதராபாத்திற்கும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.

 

இந்த சிறப்பு ரயில்கள், நெல்லூர், குண்டூர், ரேணிகுண்டா, காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை, பாலக்காடு ஆகிய ரயில் நிலையங்களில் நின்றுச் செல்லும். இந்த சிறப்பு ரயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளது. இது குறித்த கூடுதல் தகவல்களுக்கு சேலம் ரயில்வே கோட்டம் மற்றும் தெற்கு ரயில்வேயின் அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கங்களை அணுகலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.