சேலம் மாவட்டம், அப்பாமசமுத்திரம், ராமநாயகன்பாளையம் காரமடைதிட்டு பகுதியைச் சேர்ந்தவர் விவசாயி கண்ணையன் கிருஷ்ணன். இவரின் நிலத்தை அபகரிக்கும் நோக்கில் பா.ஜ.க.வின் இலக்கிய அணியின் சேலம் மாவட்ட கிழக்கு மாவட்டச் செயலாளர் குணசேகரன் என்பவர் தொடர்ந்து பல்வேறு அச்சுறுத்தல்களையும், கொலை மிரட்டல்களையும் எடுத்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இது தொடர்பாக, காவல் நிலையத்திலும், நீதிமன்றத்திலும், நிலுவையில் வழக்குகள் உள்ளன. இந்த நிலையில்தான், விவசாயிக்கு சில மாதங்களுக்கு முன்பு அமலாக்கத்துறையில் இருந்து சம்மன் வந்துள்ளது.
இதையடுத்து, விவசாயி சென்னைக்கு சென்று அமலாக்கத்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளார். அதில், சாப்பாட்டிற்கே வழியில்லாத எனக்கு சொத்துக் குவித்துள்ளதாகவும், பணம் வைத்துள்ளதாகவும் சம்மன் வழங்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளார்.
விவசாயிக்கு அமலாக்கத்துறையால் சம்மன் வழங்கப்பட்டுள்ளது சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


-SXgDfGgJfO.jpg)