ட்ரெண்டிங்

தீபாவளி பண்டிகை: இறைச்சி, பந்தய சேவல்களின் விற்பனை அதிகரிப்பு!

 

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, சேலம் மாவட்டம், ஓமலூர் வட்டாரத்தில் நாட்டு கோழியின் விலை உயர்ந்துள்ளது.

 

ஓமலூர், காடையாம்பட்டி, தாரமங்கலம் ஆகிய சுற்றுவட்டாரக் கிராமங்களில் நாட்டு கோழி வளர்ப்பு பிரதானமாக உள்ளது. கிராமங்களில் பெண்கள் புறக்கடைகளில் நாட்டு கோழிகளை வளர்த்து, வருவாய் ஈட்டி வருகின்றனர். அதேபோல், குடில் அமைத்தும் அதிகளவில் நாட்டு கோழிகள் வளர்க்கப்படுகிறது.

 

இந்த நிலையில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, இறைச்சி மற்றும் பந்தய சேவல்களின் விற்பனை அதிகரித்துள்ளது. மேலும் ஓமலூர் வட்டார நாட்டு கோழி வளர்ப்பு மையங்களிலும், மக்கள் வருகை தந்து கோழிகளை வாங்கிச் செல்கின்றனர்.

 

இறைச்சி கோழி சேவல்கள் 1,000 ரூபாய் தொடங்கி, 5,000 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.