அம்பேத்கர் விவகாரம் தொடர்பாக, டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, எனது பேச்சின் ஒரு பகுதியை மட்டுமே எடுத்து திரித்து குறை சொல்கின்றனர். நாங்கள் அம்பேத்கருக்கு எதிரானவர்கள் அல்ல; அம்பேத்கரை பற்றி நேரு குறைக் கூறியிருக்கிறார். அம்பேத்கரின் கொள்கைகளை உயர்த்திப் பிடிப்பது மோடி அரசாங்கமே.
நேரு உள்ளிட்ட காங்கிரஸார் மட்டுமே அம்பேத்கரை குறைத்து மதிப்பிட்டிருக்கிறார்கள். அம்பேத்கரின் வரலாற்று புகழை உலகம் முழுவதும் நிலைநாட்டியது பா.ஜ.க. அரசு தான். அம்பேத்கர் குறித்த எனது முழு பேச்சையும் கேட்க வேண்டும். பா.ஜ.க.வினர் முழுவதும் அம்பேத்கரின் கொள்கையைப் பின்பற்றுகிறார்கள் எனத் தெரிவித்துள்ளார்.


