ஆன்மிகம்

வரலட்சுமி நோன்பு, ஓணம் பண்டிகையையொட்டி பூக்களின் விலை கடும் உயர்வு!

வரலட்சுமி நோன்பு மற்றும் ஓணம் பண்டிகையையொட்டி, சேலம் மாநகரில் உள்ள புகழ்பெற்ற வ.உ.சி. மார்க்கெட்டில் பூக்களின் விலை நேற்றும் (ஆகஸ்ட் 24) இன்றும் (ஆகஸ்ட் 25) கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால் கிலோ கணக்கில் பூக்களை வாங்கிச் செல்லும் மக்கள் தற்போது கிராம் கணக்கில் வாங்கிச் செல்கின்றனர். சுப முகூர்த்தத் தினங்கள் மற்றும் விஷேச நாட்கள், பண்டிகை நாட்களையொட்டி, வரும் நாட்களில் பூக்களின் விலை மேலும் உயரும் என்று வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். 

மல்லிப்பூ கிலோ ரூபாய் 800 வரைக்கும், முல்லை 260 ரூபாய்க்கும், ஜாதிமல்லி 260 ரூபாய்க்கும், காக்கட்டான் 100 ரூபாய்க்கும், கலர் காக்கட்டான் 100 ரூபாய்க்கும், மலைக்காக்கட்டான் 100 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அரளி கிலோவுக்கு 120 ரூபாய்க்கும், வெள்ளை அரளி 240 ரூபாய்க்கும், மஞ்சள் அரளி 240 ரூபாய்க்கும், செவ்வரளி 240 ரூபாய்க்கும், ஐ.செவ்வரளி 140 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. 

இதனிடையே, வ.உ.சி. மார்க்கெட்டிற்கு பூக்களின் வரத்து அதிகமாக இருந்தும், பூக்களின் விலை உயர்ந்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.