ட்ரெண்டிங்

வி.ஏ.ஓ.வைத் தாக்கிய கும்பலை கைது செய்த காவல்துறை!

 

சேலம் மாவட்டம், எடப்பாடி அருகே நள்ளிரவில் கனிமவளங்களைக் கடத்திச் சென்றவர்களைப் பிடிக்கச் சென்ற கிராம நிர்வாக அலுவலரைத் தாக்கியவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.

சமுத்திரம் கிராமம் காளியம்மன் கோயில் மூலக்கடை அருகே கனிமவளங்களைக் கொள்ளையடித்துச் செல்வதாக எடப்பாடி வட்டாட்சியர் வைத்தியலிங்கத்திற்கு தகவல் கிடைத்தது. அதைத் தொடர்ந்து, எடப்பாடி வட்டாட்சி, சமுத்திரம் கிராம நிர்வாக அலுவலர் குமார் மற்றும் தாதாபுரம் கிராம நிர்வாக அலுவலர் சுரேஷ் ஆகியோருக்கு தொலைபேசி மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதன்படி, சமுத்திரத்திற்கு வந்த சுரேஷ் மற்றும் குமார் ஆகியோர் அந்த வழியில் சட்டவிரோதமாக மண் கடத்திக் கொண்டிருந்த கும்பலைச் சுற்றி வளைத்தனர். அப்போது, மண் கடத்தியக் கும்பல் கிராம நிர்வாக அலுவலர் குமாரைத் தாக்கியுள்ளது. இதில் காயமடைந்த குமார், அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

புகாரின் பேரில் கிராம நிர்வாக அலுவலரைத் தாக்கிய கும்பலை கொங்கணாபுரம் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.