கிறிஸ்துமஸ் பண்டிகை நாளை (டிச.25) கொண்டாடப்படவுள்ள நிலையில், சேலம் மாவட்டம், நான்கு ரோட்டில் அமைந்துள்ள பிரசித்திப் பெற்ற குழந்தை இயேசு பேராலயத்தில் இன்று (டிச.24) மாலை 05.00 மணி முதல் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
விடிய விடிய திருப்பலியும், இயேசு பிறப்பின் தத்ரூப நிகழ்ச்சியும் நடைபெறவுள்ளது.
ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொள்வார்கள் என்பதால் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
பல்வேறு ஸ்டால்களும் அமைக்கப்பட்டு உள்ளனர். கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி, குழந்தை இயேசு பேராலயம் வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.


-SXgDfGgJfO.jpg)