ட்ரெண்டிங்

மகளிர் விடுதிக் கட்டடங்களை முதலமைச்சர் திறந்து வைத்தார்! 

மகளிர் விடுதிக் கட்டடங்களை முதலமைச்சர் திறந்து வைத்தார்! 

சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில் இன்று (ஜூலை 13) காலை 11.30 மணிக்கு நடைபெற்ற நிகழ்ச்சியில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் கீழ் செயல்பட்டு வரும் தமிழ்நாடு பணிபுரியும் மகளிர் விடுதிகள் நிறுவனம் சார்பில், செங்கல்பட்டு மாவட்டம், கூடுவாஞ்சேரி மற்றும் திருச்சி ஆகிய மாவட்டங்களில் 13 கோடியே 7 லட்சத்து 27 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள இரண்டு புதிய பணிபுரியும் மகளிர் விடுதிக் கட்டடங்கள் மற்றும் சென்னை, விழுப்புரம், தஞ்சாவூர், சேலம், வேலூர், நெல்லை மற்றும் பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் 3 கோடியே 42 லட்சத்து 78 ஆயிரம் ரூபாய் செலவில் புதுப்பிக்கப்பட்ட 7 பணிபுரியும் மகளிர் விடுதிக் கட்டடங்கள் ஆகியவற்றை காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார். 

இந்த நிகழ்ச்சியில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி.கீதா ஜீவன், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை முதன்மைச் செயலாளர் சுன்சோங்கம் ஜடக் சிரு இ.ஆ.ப., சமூக நலத்துறை ஆணையர் அமுதவல்லி இ.ஆ.ப., சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை கூடுதல் இயக்குநர் ச.ப.கார்த்திகா இ.ஆ.ப. மற்றும் அரசு உயரதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர். 

அதேபோல், சேலம் மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன், துணை மேயர் சாரதா தேவி மற்றும் மாநகராட்சி ஆணையாளர் பாலச்சந்தர் இ.ஆ.ப. ஆகியோர் சேலத்தில் இருந்து காணொளி மூலம் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டனர்.