ட்ரெண்டிங்

ரூபாய் 36 லட்சம் மதிப்பிலான மஞ்சள் வர்த்தகம்!

 

சேலம் மாவட்டம், ஆத்தூரில் உள்ள வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் 36 லட்சம் ரூபாய் மதிப்பிலான மஞ்சள் வர்த்தகம் நடைபெற்றது.

 

விராலி மஞ்சள் குவிண்டால் ஒன்றுக்கு குறைந்தபட்சமாக 11,466 ரூபாய்க்கும், அதிகபட்சமாக 15,469 ரூபாய்க்கும் விற்பனையானது. உருண்டை மஞ்சள் குறைந்தபட்சமாக குவிண்டால் ஒன்றுக்கு 10,969 ரூபாய்க்கும், அதிகபட்சமாக 12,166 ரூபாய்க்கும் வர்த்தகமானது.

 

கடந்த வாரத்தைக் காட்டிலும் மஞ்சள் விலை குவிண்டாலுக்கு 1,000 ரூபாய் வரை குறைந்ததால் விவசாயிகள் ஏமாற்றமடைந்தனர்.