சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே ஆத்தூர் அருகே தம்மம்பட்டி பேரூராட்சி திமுக தலைவர் (கவிதா ராஜா ) மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவர கொடுக்கப்பட்ட தீர்மானத்தை மூன்று மாதங்களாகியும் மாதாந்திர கூட்டத்தில் சேர்க்கப்படாதது, அடிப்படை வசதிகளை செய்து தராதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திமுகவைச் சேர்ந்த 9 கவுன்சிலர் உட்பட 11 கவுன்சிலர்கள் இன்று நடைபெற்ற மாதாந்திர பேரூராட்சி கூட்டத்தை புறக்கணித்து பேரூராட்சி அலுவலகம் முன்பு வாயில் கருப்புத் துணி கட்டிக் கொண்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.
ஆத்தூர் அருகே உள்ள தம்மம்பட்டி பேரூராட்சியில் 18 வார்டு உள்ளது. இதில் (திமுக - 13, காங் - 2, அதிமுக - 3) உறுப்பினர்களை கொண்ட இந்த பேரூராட்சியின் தலைவராக திமுகவைச் சேர்ந்த கவிதா தலைவராகவும், அவரது கணவர் ராஜா வார்டு உறுப்பினராகவும் உள்ளார்கள் .
இந்நிலையில் பேரூராட்சிக்கு அரசால் ஒதுக்கீடு செய்யப்படும் நிதியினை அனைத்து வார்டுகளிலும் திட்ட பணிகளை செய்யாமல் தலைவர் மற்றும் அவரது கணவர் வார்டு பகுதிகளுக்கு மட்டும் திட்டப்பணிகள் செய்யப்படுவதாகவும், திட்டப்பணிகளின் ஒப்பந்த புள்ளிகளை தங்களுக்கு வேண்டப் பட்டவர்களுக்கு தணிச்சையாக தலைவர் ஒதுக்கீடு செய்வதோடு,மக்கள் வரிப்பணத்தில் முறைகேடு செய்யும் பேரூராட்சி தலைவி கவிதா அவரது கணவர் கவுன்சிலர் ராஜா பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டு வருவதோடு தன்னிச்சையாக செயல்படும் தபேரூராட்சி தலைவர் கவிதா மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர வலியுறுத்தி 9 திமுக, கவுன்சிலர்கள், 2 காங்கிரஸ் கவுன்சிலர்கள் உள்பட 11 கவுன்சிலர்கள் பேரூராட்சி செயல் அலுவலர் ஜெசிமா பானுவிடம் கடந்த மூன்று மாதத்திற்கு முன்பு மனு அளித்திருந்தனர்,
இந்நிலையில் தம்மம்பட்டி பேரூராட்சி மன்ற மாதாந்திர கூட்டம் இன்று நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு தலைவர் கவிதா ராஜா தலைமையில் கூட்டம் தொடங்கியது, தலைவர் அவரது கணவர் மற்றும் செயல் அலுவலர் அவரது ஆதரவு கவுன்சிலர் மட்டுமே கூட்ட அரங்கில் அமர்ந்திருந்தனர், இன்னிலையில் கூட்டத்தில் பேரூராட்சி தலைவர் மீது கொடுக்கப்பட்ட நம்பிக்கை இல்லா தீர்மானத்தை சேர்க்காதது, பேரூராட்சிக்கு சொந்தமான கடைகளின் வாடகையை வசூலிக்காமல் ஒன்றரை கோடி ரூபாய்க்கு மேல் பாக்கி வைத்துள்ளது, மின்மயானம் கட்டி 4 ஆண்டுகளாகியும் பயன்பாட்டிற்கு கொண்டு வராமல் காலம் தாழ்த்தி வருவது. உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பேரூராட்சி மன்ற அலுவலகத்தில் நடைபெற்ற பேரூராட்சி மன்ற கூட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும் புறக்கணித்தும், தலைவர் மற்றும் செயலாளரை கண்டித்து பேரூராட்சி மன்ற அலுவலகம் முன்பு 5 பெண் கவுன்சிலர்கள் உள்பட 10 கவுன்சிலர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இச்சம்பவம் திமுக,வினரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .

-5jDBqKzJU9.jpeg )

-SXgDfGgJfO.jpg)