சேலம் மாநகராட்சியின் அம்மாப்பேட்டை மண்டலத்திற்கு உட்பட்ட 11-வது வார்டில் உள்ள தில்லை நகர் பொன் கணபதி வழிபாட்டு மண்டபத்தில் இன்று (டிச.20) காலை 10.00 மணிக்கு நடைபெற்ற மக்களுடன் முதல்வர் முகாமில் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட பல்வேறு விண்ணப்பங்களை சேலம் மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன் நேரில் பார்வையிட்டார். அத்துடன், பொதுமக்களிடம் கலந்துரையாடினார்.
அதேபோல், கொண்டலாம்பட்டி மண்டலத்திற்கு உட்பட்ட 47-வது வார்டில் அம்பேத்கர் நகரில் உள்ள சமுதாய கூடத்தில் நடைபெற்ற மக்களுடன் முதல்வர் முகாமில் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட பல்வேறு விண்ணப்பங்களை மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன் நேரில் பார்வையிட்டார்.
இந்த நிகழ்வின் போது, மாநகராட்சியின் உதவி ஆணையாளர் வேடியப்பன், மாமன்ற உறுப்பினர்கள் இந்துஜா, தெய்வலிங்கம், புனிதா மற்றும் அலுவலர்கள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.


