ட்ரெண்டிங்

பெண்களே மெஜாரிட்டி வாக்காளர்கள்- மருத்துவர்.ராமதாஸ் பேச்சு!

 

சேலத்தில் உள்ள பிசிசி திருமண மண்டபத்தில் சேலம் ஒருங்கிணைந்த மாவட்ட பா.ம.க. நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம், அக்கட்சியின் நிறுவனர் மருத்துவர்.ராமதாஸ் மற்றும் பா.ம.க. தலைவர் மருத்துவர்.அன்புமணி ராமதாஸ் ஆகியோர் தலைமையில் இன்று (ஜன.28) காலை 11.00 மணிக்கு நடைபெற்றது.

 

இக்கூட்டத்தில் பா.ம.க.வின் சேலம் மாநகர் மாவட்டச் செயலாளரும், சேலம் மேற்கு சட்டமன்றத் தொகுதி உறுப்பினருமான அருள், பா.ம.க.வின் சேலம் மேற்கு மாவட்டச் செயலாளரும், மேட்டூர் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினருமான சதாசிவம் மற்றும் பா.ம.க.வின் சட்டமன்றக் குழுத் தலைவர் ஜி.கே.மணி, பா.ம.க. நிர்வாகிகள், தொண்டர்கள் என 500- க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். 

 

கூட்டத்தில் பேசிய பா.ம.க. நிறுவனர் மருத்துவர்.ராமதாஸ், பா.ம.க. ஒரு சமுதாயத்துக்கானது அல்ல; அனைத்து சமுதாய மக்களுக்கானது; பா.ம.க. அனைவருக்காகவும் பாடுபடும்; அதில் வஞ்சனையோ, ஏற்றத்தாழ்வோ இருக்காது. பெண்களே மெஜாரிட்டி வாக்காளர்கள்; அவர்கள் நினைத்தால் மாற்றம் கொண்டு வர முடியும் எனத் தெரிவித்தார்.