ட்ரெண்டிங்

பயனாளிகளுக்கு வீட்டின் சாவிகளை வழங்கிய அமைச்சர் கே.என்.நேரு!

 

சேலம் மாவட்டம், தாரமங்கலம் ஒன்றியத்திற்குட்பட்ட ஆரூர்பட்டி ஊராட்சியில் இன்று (டிச.16) காலை 11.30 மணிக்கு நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, வெள்ளக்கால்பட்டி நரிக்குறவர் குடியிருப்பில் ரூபாய் 2.21 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 48 வீடுகளைத் திறந்து வைத்த ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். அத்துடன், பயனாளிகளுக்கு வீட்டின் சாவிகளை வழங்கினார்.

 

இந்த நிகழ்ச்சியில், தி.மு.க.வின் சேலம் மத்திய மாவட்டச் செயலாளரும், சேலம் வடக்கு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினருமான ராஜேந்திரன், முன்னாள் அமைச்சர் டி.எம்.செல்வகணபதி, சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம், மாநகராட்சி ஆணையாளர் பாலச்சந்தர் மற்றும் பல்வேறு துறையைச் சார்ந்த அரசு உயரதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.