ட்ரெண்டிங்

தற்காலிக நிவாரணமாக ரூபாய் 7,033 கோடி வழங்குக- முதலமைச்சர் மு.கஸ்டாலின் வலியுறுத்தல்!

 

புயல், மழையால் ஏற்பட்ட பாதிப்புகளை சீர்செய்ய தற்காலிக நிவாரணத் தொகையாக ரூபாய் 7,033 கோடியை வழங்க வேண்டும் என்று மத்தியக் குழுவிடம் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

 

 

தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (டிச.14) தலைமைச் செயலகத்தில், மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட கனமழையால் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்ட மத்தியக் குழுவின் தலைவரும், தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் ஆலோசகருமான குணால் சத்யாத்ரியிடம் மிக்ஜாம் புயல் பாதிப்புகள் மற்றும் நிதி ஒதுக்கீட்டிற்கான கோரிக்கை மனுவினை அளித்தார்.

 

இந்த நிகழ்வின் போது, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, மத்திய குழு உறுப்பினர்கள் மற்றும் அரசு உயரதிகாரிகள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

 

மத்தியக் குழுவிடம் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், புயல், மழையால் ஏற்பட்ட பாதிப்புகளை சீர்செய்ய நிரந்தர நிவாரணத் தொகையாக ரூபாய் 12,659 கோடி வழங்க வேண்டும். தற்காலிக நிவாரணத் தொகையாக ரூபாய் 7,033 கோடி வழங்க வேண்டும். மீனவர்கள், சிறு, குறு நிறுவனங்களுக்கு ஏற்பட்டுள்ள இழப்புகளை ஈடுச்செய்ய வேண்டியுள்ளது. சாலையோர வியாபாரிகள், வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உதவிகளை வழங்க நிதி தேவை" என்று வலியுறுத்தியுள்ளார்.