ட்ரெண்டிங்

நடப்போம் நலம் பெறுவோம்-சேலம் நடந்த நடைபயிற்சியை 500- க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு!

 

சேலத்தில் இன்று (நவ.04) காலை 06.00 மணிக்கு நடைபெற்ற நடப்போம் நலம் பெறுவோம் நடைபயிற்சியில் 500- க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

 

தமிழகம் முழுவதும் 8 கிலோ மீட்டர் தூரம் நடைபயிற்சி மேற்கொள்ளும் வகையில் நடப்போம் நலம் பெறுவோம் எனும் நடைபயிற்சி திட்டத்தை சென்னையில் இருந்து காணொளி மூலம் தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை, முதலமைச்சரின் சிறப்புச் செயலாக்கத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகியோர் துவக்கி வைத்தனர்‌.

 

இதைத் தொடர்ந்து, சேலம் மாவட்டம், அஸ்தம்பட்டி ரவுண்டானா பகுதியில் இருந்து துவங்கிய நடப்போம் நலம் பெறுவோம் நடைபயிற்சி, கோரிமேடு வழியாக மாடர்ன் தியேட்டர்ஸ் வரை சென்று மீண்டும் அஸ்தம்பட்டி ரவுண்டானாவில் நிறைவுப் பெற்றது.

 

இதில் சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் இ.ஆ.ப., சேலம் மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன், சேலம் மாநகராட்சி ஆணையாளர் பாலச்சந்தர், சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜேந்திரன், சதாசிவம், உள்ளாட்சி பிரதிநிதிகள்,கல்லூரி மாணவ மாணவிகள் மற்றும் பொதுமக்கள் என 500- க்கும் மேற்பட்டோர் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.