ட்ரெண்டிங்

ரேஷன் கடையை முற்றுகையிட்டு பெண்கள் தர்ணா! 

சேலம் மாவட்டம், நெத்திமேடு மணியனூர் பகுதியில் அமைந்துள்ள அரசு நியாயவிலைக் கடையில் விற்பனையாளராக கண்ணன் என்பவர் பணியாற்றி வந்தார். இந்த நிலையில், கடந்த 3 மாதங்களாக பொருட்கள் வழங்கப்படவில்லை என்றும், ஆனால் பொருட்கள் வாங்கியது போன்று செல்போனிற்கு குறுஞ்செய்தி வந்துக் கொண்டிருப்பதாகக் கூறி இப்பகுதி பெண்கள் 50- க்கும் மேற்பட்டோர் முற்றுகையிட்டு கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 

அப்போது, பெண்கள் அனைவரும் ஒன்று திரண்டு என்னுடைய பொருட்களை வெளியே விற்பனை செய்ய நீ யார்? என்று கடுமையாகத் திட்டினர். இதனிடையே, குற்றச்சாட்டு காரணமாக விற்பனையாளர் கண்ணன் என்பவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக கணேசன் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இதனிடையே சஸ்பெண்ட் செய்யப்பட்ட கண்ணன், அதே அரசு நியாய விலைக் கடைக்கு வந்தபோது  முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது தான் அரிசியை விற்பனை செய்யவில்லை; தன்னை மிரட்டி அரிசி வாங்கிக் கொள்வதாக சஸ்பெண்ட் செய்யப்பட்ட கண்ணன் பகிரங்க குற்றச்சாட்டை முன் வைத்தார்.