ட்ரெண்டிங்

தி.மு.க.வில் இணைந்த மாற்றுக் கட்சியினர்!

 

சேலம் மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள தி.மு.க.வின் சேலம் மத்திய மாவட்ட அலுவலகமான கலைஞர் மாளிகையில் இன்று (ஜன.18) நடைபெற்ற நிகழ்ச்சியில் நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த 120- க்கும் மேற்பட்டோர் சேலம் நாடாளுமன்ற தொகுதியின் செயலாளர் பாலசுப்ரமணியன் தலைமையில் அக்கட்சிகளில் இருந்து விலகி தி.மு.க.வின் சேலம் மத்திய மாவட்டச் செயலாளரும், தமிழ்நாடு சுற்றுலாத்துறை அமைச்சருமான ராஜேந்திரன் முன்னிலையில் தங்களை தி.மு.க.வில் இணைத்துக் கொண்டனர். 

 

தி.மு.க.வில் இணைந்த மாற்றுக் கட்சியினரை அமைச்சர் ராஜேந்திரன், தி.மு.க. துண்டு அணிவித்து வரவேற்றார். அத்துடன், 2026- ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. கூட்டணி அமோக வெற்றி பெற அனைவரும் இணைந்து உழைக்க வேண்டும் எனத் தெரிவித்தார். 

 

இந்நிகழ்ச்சியில் மாவட்ட, பகுதி தி.மு.க. நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர். நாம் தமிழர் கட்சியில் இருந்து தொடர்ச்சியாக நிர்வாகிகள் வெளியேறி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.