ட்ரெண்டிங்

21 டி.எம்.சி. தண்ணீர் இறுதிபோக சாகுபடிக்கு திறக்க வாய்ப்பு!

 

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 140 நாட்களுக்கு பிறகு மீண்டும் 68 அடியாக உயர்ந்துள்ளது.

 

மேட்டூர் அணையில் இருந்து கடந்த ஜூன் 12- ஆம் தேதி குறுவை பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டது. நடப்பாண்டில் கேரளா, கர்நாடகா காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பருவமழை பொய்த்து போனதால், இருபோக சாகுபடி நடவுப் பணியை கைவிடும் படி, விவசாயிகளுக்கு அரசு சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில், கடந்த அக்டோபர் மாதம் முதல் மேட்டூர் அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக மட்டும் வினாடிக்கு 250 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

 

இந்த நிலையில், தமிழகம்- கர்நாடாகா காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பரவலாகப் பொழியும் மழையால், அணைக்கான நீர்வரத்து ஏற்றம், இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில், அணையின் நீர்மட்டம் 140 நாட்களுக்கு பிறகு மீண்டும் 68 அடியாக உயர்ந்துள்ளது.

 

இதனால் இறுதிப்போக சாகுபடிக்கு சுமார் 21 டி.எம்.சி. தண்ணீர் திறக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. இன்றைய நிலவரப்படி, அணையின் நீர்மட்டம் 67.92 அடியில் இருந்து 68.22 அடியாக உயர்ந்துள்ளது.