ட்ரெண்டிங்

புதுப்பொலிவுடன் கூடிய கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தைத் திறந்து வைத்த அமைச்சர்கள்!

சேலம் கடைவீதியில் உள்ள 1,200 சதுர அடி பரப்பளவில் இயங்கி வரும் கோ- ஆப்டெக்ஸ் தங்கம் பட்டு மாளிகை விற்பனை நிலையம் ரூபாய் 2.35 கோடி மதிப்பில் புதுப்பிக்கப்பட்டுள்ளது. 

 

கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையம் முழுவதும் குளிர்சாதன வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்களின் வசதிக்காக எக்ஸ்லேட்டர் மற்றும் லிப்ட் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. 

 

புதுப்பொலிவுடன் அமைக்கப்பட்டுள்ள கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தை தமிழக நகர்புறத்துறை அமைச்சர் கே.என்.நேரு மற்றும் கைத்தறி மற்றும் ஜவுளித்துறை அமைச்சர் காந்தி ஆகியோர் இன்று (அக்.02) காலை 10.00 மணிக்கு திறந்து வைத்தனர். 

 

அதைத் தொடர்ந்து, விற்பனையைத் தொடங்கி வைத்த அமைச்சர்கள், கைத்தறி பட்டுப் புடவைகள், பட்டு வேஷ்டி களைப் பார்வையிட்டனர். 

 

இந்த நிகழ்ச்சியில், சட்டமன்ற உறுப்பினர்கள் அருள், ராஜேந்திரன், நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். ஆர். பார்த்திபன், சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம், மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன் மற்றும் அரசு உயரதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.