ட்ரெண்டிங்

சிறுமிக்கு பாலியல் தொல்லை- இளைஞருக்கு சிறைத் தண்டனை!

சிறுமிக்கு பாலியல் தொல்லை- இளைஞருக்கு சிறைத் தண்டனை! 

சேலம் மாவட்டம், ஜலகண்டாபுரம் அருகே உள்ள அரியாம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் ராஜா (வயது 29). கடந்த 2017-ஆம் ஆண்டு மார்ச் 4- ஆம் தேதி தண்ணீர் பிடிக்க வந்த 14 வயது சிறுமியிடம் ராஜா ஆசை வார்த்தைக் கூறி, சிறுமியைக் கடத்திச் சென்று திருமணம் செய்துக் கொண்டார். அத்துடன், சிறுமிக்கு பாலியல் தொல்லைக் கொடுத்துள்ளார். 

இது குறித்து ஜலகண்டாபுரம் காவல் நிலையத்தில் சிறுமியின் உறவினர்கள் புகார் அளித்தனர். இதையடுத்து, ராஜா மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவுச் செய்த காவல்துறையினர் சிறையில் அடைத்தனர். 

இந்த வழக்கு சேலம் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. ராஜா மீது காவல்துறை தரப்பில் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கைத் தாக்கல் செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து, அனைத்து தரப்பு வாதங்களும் நீதிமன்றத்தில் நடைபெற்றது. அதனை பதிவுச் செய்துக் கொண்ட போக்சோ நீதிமன்ற நீதிபதி ஜெயந்தி, ராஜாவுக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், ரூபாய் 1,000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்துள்ளார்.