ட்ரெண்டிங்

கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தில் ஆட்சியர் கார்மேகம் ஆய்வு!

 

சேலம் மாவட்டக் கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தின் செயல்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர் .கார்மேகம் இ.ஆ.ப. நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

 

சேலம் மாவட்டக் கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தில் புதியதாக 7 லட்சம் லிட்டர் பால் கொள்ளளவு கொண்ட புதிய ஆலை கட்டுமானப் பணிகளையும், தினசரி 30 டன் பால் பவுடர் உற்பத்திச் செய்யும் வகையில் நடைபெற்று வரும் கட்டுமானப் பணிகளையும் மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார்.

 

இதனைத் தொடர்ந்து, சேலம் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தில் பால் பாக்கெட் உற்பத்தி செய்யும் பகுதி மற்றும் வெண்ணெய், நெய் உற்பத்தி செய்யும் பகுதியினை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். ஐஸ்கிரீம் உற்பத்திச் செய்யும் இடத்தினை பார்வையிட்டு தினசரி உற்பத்தி மற்றும் விற்பனை குறித்து மாவட்ட ஆட்சியர் கேட்டறிந்தார்.

 

மேலும், தினசரி பால் கொள்முதல் மற்றும் விற்பனை குறித்தும், பால் பொருட்கள் உற்பத்தியின் திறன் உள்ளிட்டவைகளை ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர், சேலம் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் (ஆவின்), பால் மற்றும் பால் பொருட்களை நுகர்வோருக்கு நியாயமான விலையில் வழங்கி. கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேல் பால் விற்பனையில் சிறந்து விளங்குகிறது. இதுபோன்று தொடர்ந்து சேவையாற்றிட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

 

இந்த ஆய்வின்போது, சேலம் மாவட்ட வருவாய் அலுவலரும், ஆவின் பொது மேலாளருமான குமரேஸ்வரன், துணை பொது மேலாளர்கள் உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் உடனிருந்தனர்.