ட்ரெண்டிங்

மலைப்பாதையில் திடீரென தீப்பற்றி எறிந்த கார்!

ஏற்காடு மலைப்பாதையில் சொகுசு கார் தீப்பற்றி எரிந்தது. 

சேலம் மாவட்டம், ஏற்காடு மலைப்பாதையில் சென்றுக் கொண்டிருந்த சொகுசு கார், 60 அடி பாலத்தை கடந்த போது, திடீரென புகை வந்துள்ளது. இதையடுத்து, காரில் பயணித்த இருவரும், காரை ஓரமாக நிறுத்தி, காரில் இருந்து இறங்கிய நிலையில், சிறிது நேரத்தில் கார் முழுவதும் தீப்பற்றியது. 

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர், கொளுந்து விட்டு எரிந்த தீயை தண்ணீரைப் பீய்ச்சியடித்து முழுவதுமாக அணைத்தனர். இந்த சம்பவம் குறித்து ஏற்காடு காவல்துறையினர் வழக்குப்பதிவுச் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.