ட்ரெண்டிங்

மூதாட்டியின் வீட்டைச் சுற்றித் தெளிக்கப்பட்ட ரத்தம்!

 

சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே வீட்டைச் சுற்றி ரத்தம் தெளிக்கப்பட்டதால், சம்மந்தப்பட்ட வீட்டில் இருந்த மூதாட்டி அச்சமடைந்துள்ளார். 

 

ஓமலூர் அருகே உள்ள மேட்டுக்காடு பகுதியில் தனியாக வசித்து வரும் பாக்யம் என்ற மூதாட்டியின் வீட்டைச் சுற்றி அடையாளம் தெரியாத நபர்கள் ரத்தம் தெளித்துச் சென்றுள்ளனர். வாசலில் ரத்தம் கட்டிக்கட்டியாக இருப்பதைப் பார்த்து அச்சமடைந்த மூதாட்டி, காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். 

 

அதில், தன் நிலத்தை அபகரிக்கும் நோக்கில், யாரோ மிரட்டல் விடுக்கும் வகையில் இத்தகைய செயலில் மூதாட்டி புகாரில் கூறியுள்ளார். இது குறித்து வழக்குப்பதிவுச் செய்துள்ள காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

 

இந்த சம்பவம் அப்பகுதியில் வசிக்கும் மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.