ட்ரெண்டிங்

மேட்டூர் 600 மெகாவாட் அனல் மின்நிலையத்தில் பழுது!

மேட்டூரில் 600 மெகாவாட் அனல் மின்நிலையத்தில் ஒரே மாதத்தில் மூன்றாவது முறையாக கொதிகலன் குழாயில் வெடிப்பு ஏற்பட்டுள்ளது. அதன் காரணமாக, 580 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. 

கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், மின் தேவையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், ஒரே மாதத்தில் மூன்றாவது முறையாக 600 மெகாவாட் அனல் மின்நிலையத்தில் கொதிகலன் குழாயில் ஏற்பட்ட வெடிப்பு காரணமாக, மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. 

கொதிகலன் குழாயில் வெடிப்பு ஏற்படுவதால் மின் உற்பத்தி பாதிக்கப்படுவது தொடர் கதையாக உள்ளது. இதற்கு தரமற்ற பொருட்கள் காரணமா? அல்லது அதிகாரிகளின் அலட்சியம் காரணமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. 

ஒருமுறை மின் உற்பத்தியை நிறுத்திவிட்டு மீண்டும் தொடங்கினால் பல கோடி ரூபாய் செலவு செய்யப்படும் நிலையில், இதுப்போன்று மீண்டும் நடைபெறாமல் இருக்க, உரிய ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.