சேலம் மாவட்டத்தில் பெட்ரோல் பங்க் ஒன்றில் இளைஞர்கள் 2 பேர் மீது தாக்குதல் நடத்தும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.
ஓமலூருக்கு அருகே செ.பெருமான்கொட்டாய் பகுதியைச் சேர்ந்த லோகநாதன், பாலாஜி ஆகியோர் தாரமங்கலத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளனர். அப்போது, செம்மாண்டப்பட்டியில் உள்ள பெட்ரோல் பங்க்கில் இருசக்கர வாகனத்திற்கு எரிபொருள் நிரப்பிக் கொண்டிருந்தனர்.
அப்போது, இரண்டு சக்கர வாகனத்தில் வந்த இரண்டு நபர்கள் வாகனத்தின் மீது மோதியுள்ளன. இதில் ஏற்பட்ட தகராறில் கஞ்சா போதையில் இருந்த ரவுடிகள் இருவரும் லோகநாதனையும், பாலாஜியையும் தாக்கியுள்ளனர். இதையடுத்து, லோகநாதனும், பாலாஜியும் உறவினர்களோடு, தாக்கிய நபர்களின் இருப்பிடத்திற்கு சென்று தட்டிக் கேட்டுள்ளனர்.
அப்போது, அவர்களை இரும்புக் கம்பியால் ரவுடிகள் சரமாரியாகத் தாக்கியுள்ளனர். இதில், லோகநாதன், பாலாஜி, மணிகண்டன், ராமசாமி, அஜித், பூபாலன் ஆகியோர் படுகாயமடைந்தனர். இது தொடர்பாக, நான்கு பேரை கைது செய்து, காவல்துறையினர் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும், இருவேறு சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கிடையே மோதல் ஏற்படக்கூடும் என்பதால், காவல்துறையினர் முன்னெச்சரிக்கையாக பாதுகாப்பைப் பலப்படுத்தியுள்ளனர். சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் கபிலன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்.


