ட்ரெண்டிங்

விநாயகர் சதுர்த்தி பண்டிகை- பூக்களின் விலை உயர்வு!

தமிழகம் முழுவதும் விநாயகர் சதுர்த்தி பண்டிகை நாளை மறுநாள் (செப்.18) கொண்டாடப்படவுள்ள நிலையில், பூக்களின் விலை உயர்ந்துள்ளது.

 

சேலம் மாநகரில் அமைந்துள்ள புகழ்பெற்ற வ.உ.சி. மார்க்கெட்டில் இன்று (செப்.16) காலை நிலவரப்படி பூக்களின் விலைக் குறித்து விரிவாகப் பார்ப்போம். அந்த வகையில், ஒரு கிலோ மல்லிகை பூ 800 ரூபாய்க்கும், ஒரு கிலோ முல்லை 600 ரூபாய்க்கும், ஒரு கிலோ காக்கட்டான், கலர் காக்கட்டான், மலைக்காக்கட்டான் 360 ரூபாய்க்கும், ஒரு கிலோ ஜாதிமல்லி 280 ரூபாய்க்கும், ஒரு கிலோ சி.நந்திவட்டம் 400 ரூபாய்க்கும், ஒரு கிலோ சம்பங்கி மற்றும் சாதா சம்பங்கி 240 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

 

ஒரு கிலோ வெள்ளை அரளி, மஞ்சள் அரளி, ஐ.செவ்வரளி தலா 150 ரூபாய்க்கும், ஒரு கிலோ அரளி 140 ரூபாய்க்கும், ஒரு கிலோ செவ்வரளி 200 ரூபாய்க்கும், ஒரு கிலோ நந்தியாவட்டம் 180 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

 

விநாயகர் சதுர்த்தி மற்றும் சுபமுகூர்த்த நாட்கள் என அடுத்த ஒரு வாரத்திற்கு விஷேச நாட்கள் இருப்பதால் பூக்களின் விலை மேலும் உயரும் என்று வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.