சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே முத்துமலை முருகன் கோயிலில் கந்தசஷ்டி திருவிழா வெகு விமர்சையாகத் தொடங்கியுள்ளது.
கந்தசஷ்டி திருவிழாவையொட்டி, ஏத்தாப்பூரில் உள்ள முத்துமலை முருகனுக்கு பால், பன்னீர், மஞ்சள், சந்தனம் உள்ளிட்ட வாசனை திரவியங்கள் கொண்டு முருகனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து, முருகனை வண்ண மலர்களால் அலங்கரித்து, வெள்ளி மற்றும் தங்கக்கவசங்கள் அணிவிக்கப்பட்டு, மஹா தீபாராதனை காட்டப்பட்டது.
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். கந்தசஷ்டி திருவிழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் வரும் நவம்பர் 18- ஆம் தேதி சனிக்கிழமை அன்று கோலாகலமாக நடைபெறவுள்ளது. தீபாவளி பண்டிகை விடுமுறையையொட்டி, சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள், முத்துமலை முருகன் கோயிலில் குவிந்துள்ளனர்.


