ட்ரெண்டிங்

சிறுபான்மையின,தலைவர்கள் நிர்வாகிகள்,அதிமுகவினரை சந்திப்பதை முதல்வரால் பொறுத்துக் கொள்ள ம

 

சேலம் ஓமலூரில் உள்ள அ.தி.மு.க. அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில் கலந்து கொண்ட கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார். 

 

அப்போது அவர் கூறியதாவது, திருவண்ணாமலையில் நடைபெற்ற தி.மு.க. தேர்தல் முகவர் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசும் போது தமிழக முதல்வர் பல்வேறு விமர்சனம் என்னை பற்றி செய்துள்ளார். அந்தக் கூட்டத்தில் தமிழக முதல்வர் என்னைப் பற்றி மட்டுமே அதிகம் பேசியுள்ளார். அப்போது எடப்பாடி பழனிசாமி பொய்யர் பழனிசாமி என்று குறிப்பிட்டுள்ளார். நான் எந்தவித பொய் செய்தியும் வெளியிட்டதே இல்லை. 

 

என்னுடைய அறிக்கையிலும், ஊடகம் வாயிலாக பேட்டியளிக்கும் போதும் பொய்யான செய்தியை எப்பொழுதும் கொடுத்ததில்லை. வேண்டுமென்றே திட்டமிட்டு தி.மு.க. தலைவர் ஸ்டாலின் என்னைப் பற்றி தவறான விமர்சனம் செய்துள்ளார். இது கண்டிக்கத்தக்கது 

 

தமிழகத்தில் இரண்டரை ஆண்டு திராவிட மாடல் ஆட்சி என்று கூறி வரும் நிலையில் மக்கள் கொதித்துப் போய் வெறுத்துள்ளனர். அதை தாங்கிக் கொள்ள முடியாமல், அந்த பயத்தில் என்னைப் பற்றி விமர்சனம் செய்துள்ளார். பா.ஜ.க. கூட்டணியில் இருந்து விலகிவிட்ட பிறகு அ.தி.மு.க. பற்றி பல்வேறு விமர்சனங்களை தமிழக முதல்வர் செய்து வருகிறார். 

 

பா.ஜ.க. கூட்டணி இருந்து அ.தி.மு.க. விலகிவிட்டது. அவரது பேச்சும், அறிக்கையிலிருந்து புரிந்து கொள்ள முடிகிறது. இதுவரை சிறுபான்மை மக்களை ஏமாற்றி வந்தார்கள்.

 

தமிழகத்தில் சிறுபான்மைக்கு

தி.மு.க.வும், கூட்டணி கட்சிகளும் மக்களுக்கு நன்மை செய்வது போன்று ஒரு தோற்றத்தை ஏற்படுத்தி வந்தனர். இப்பொழுது கூட்டணியில் இருந்து அ.தி.மு.க. விலகிய பிறகு சிறுபான்மை மக்கள் அ.தி.மு.க.வுடன் நடைபெறும் சந்திப்பை தி.மு.க. தலைவரால் ஏற்றுக் கொள்ள முடியாமல், வெறுப்பு பேச்சு முதல்வரிடம் இருந்து வந்து கொண்டிருக்கிறது.இவ்வாறு எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.