ட்ரெண்டிங்

காலை உணவுத் திட்ட செயல்பாடுகள் குறித்து மாவட்ட கண்காணிப்பு அலுவலர் நேரில் ஆய்வு!

சேலம் மாவட்டம், கொண்டப்பநாயக்கன்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய மேலாண்மை இயக்குநர் முனைவர்.பொ.சங்கர் இ.ஆ.ப. மற்றும் சேலம் மாவட்ட ஆட்சித்தலைவர் கார்மேகம் இ.ஆ.ப. ஆகியோர் இன்று (செப்.21) காலை 08.00 மணிக்கு நேரில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, பள்ளி மாணவர்களுடன் சங்கர் கலந்துரையாடியதுடன், உணவின் சுவை, தரம் ஆகியவைக் குறித்தும் கேட்டறிந்தார்.

 

அதைத் தொடர்ந்து, சேலம் மாநகராட்சியின் அம்மாப்பேட்டை மண்டலத்திற்கு உட்பட்ட அல்லிக்குட்டை ஏரியில் நடைபெற்று வரும் புனரமைப்புப் பணிகளை மாவட்டக் கண்காணிப்பு அலுவலர் மற்றும் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய மேலாண்மை இயக்குநர் முனைவர்.பொ.சங்கர் இ.ஆ.ப. மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் கார்மேகம் இ.ஆ.ப., அவர்கள் ஆகியோர் இன்று (செப்.21) காலை 09.30 மணிக்கு நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.

 

இந்த ஆய்வின் போது, கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) அலர்மேல்மங்கை இ.ஆ.ப., மாவட்ட வருவாய் அலுவலர் மேனகா, உதவி ஆட்சியர் (பயிற்சி) சுவாதிஸ்ரீ இ.ஆ.ப மற்றும் மாநகராட்சி ஆணையாளர் பாலச்சந்தர் இ.ஆ.ப. ஆகியோர் உடனிருந்தனர்.