ட்ரெண்டிங்

தமிழக- கர்நாடகா காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்த மழையால் நீர்வரத்து உயர்வு!

 

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 47.86 அடியில் இருந்து 48.36 அடியாக உயர்ந்துள்ளது.

 

தமிழகம் மற்றும் கர்நாடகா காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக, மேட்டூர் அணைக்கான நீர்வரத்து கடந்த மூன்று தினங்களாக வினாடிக்கு 4,000 கனஅடிக்கும் கீழ் குறையாமல் வந்துக் கொண்டிருக்கிறது. மேட்டூர் அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 500 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டும், நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

 

இதன் காரணமாக, இன்னும் ஒரு சில தினங்களில் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 50 அடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேட்டூர் அணையில் நீர் இருப்பு 16.79 டி.எம்.சி.யாக உள்ளது. நீர்வரத்து வினாடிக்கு 4,288 கனஅடியில் இருந்து 4,114 கனஅடியாகக் குறைந்துள்ளது.

 

குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 500 கனஅடி தண்ணீர், அணை மின் நிலையம் வழியாக வெளியேற்றப்பட்டு வருகிறது.