ட்ரெண்டிங்

மாவட்ட நிர்வாகத்தால் நடத்தப்பட்ட கல்விக்கடன் மேளாவில் ஏராளமான மாணவர்கள் பங்கேற்பு!

 

சேலம் மாவட்ட நிர்வாகத்தால் சோனா தொழில்நுட்பக் கல்லூரியில் நடத்தப்பட்ட கல்விக்கடன் மேளாவை சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் இ.ஆ.ப., இன்று (அக்.15) காலை 10.00 மணிக்கு தொடங்கி வைத்தார். அதைத் தொடர்ந்து, கல்விக்கடன் மேளாவில் கல்விக்கடன் விண்ணப்பம் பதிவு செய்யும் உதவி மையத்தினை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டார்.

 

இந்த கல்விக்கடன் மேளாவில் ஏராளமான மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு, கல்விக்கடனுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பித்தனர். இதனிடையே, கல்விக்கடன் மேளாவில் கல்விக்கடன் கோரி விண்ணப்பிக்கும் மாணவர்களின் விண்ணப்பத்தை நிராகரிக்கக் கூடாது என்று வங்கிகளின் மேலாளர்களுக்கு ஆட்சியர் ஏற்கனவே அறிவுறுத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

இந்த நிகழ்ச்சியில், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) அலர்மேல் மங்கை இ.ஆ.ப., குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் துறை முதுநிலை கடன் ஆலோசகர் வணங்காமுடி, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் இளவரசு, மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் சிவகுமார், திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) பெரியசாமி உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.