சேலம் மாவட்டத்தில் பூலாம்பட்டி, கருப்பூர், மல்லியக்கரை, உடையாப்பட்டி ஆகிய துணை மின் நிலையங்களில் நாளை (ஜன.09) மின் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளவிருப்பதால் மின்விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.
பூலாம்பட்டி துணை மின்நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளவிருப்பதால், பூலாம்பட்டி, கூடக்கல், குப்பனூர், பில்லுக்குறிச்சி, வன்னியநகர், வளைய செட்டியூர், கள்ளுக்கடை, சித்தூர், செடிக்காரன்பாளையம், குஞ்சாம்பாளையம், வெள்ளரிவெள்ளி, கல்லப்பாளையம், நெடுங்குளம், கோனேரிப்பட்டி, கல்வடங்கம், பூமணியூர், பொன்னம்பாளையம், புதுப்பட்டி ஆகிய பகுதிகளில் நாளை (ஜன.08) காலை 09.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை மின்விநியோகம் இருக்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருப்பூர் துணை மின்நிலையத்தில் மின் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளவிருப்பதால், கருப்பூர், கரும்பாலை, தேக்கம்பட்டி, செங்கரடு, மேட்டுபதி, புதூர், சங்கீதப்பட்டி, வெள்ளாளப்பட்டி, காமலாபுரம், எட்டிகுட்டப்பட்டி, கருத்தானூர், சக்கரசெட்டிப்பட்டி, செக்காரப்பட்டி, புளியம்பட்டி, குள்ளமநாயக்கன்பட்டி, நாரணம்பாளையம், ஆணைகவுண்டம்பட்டி, ஹவுசிங்போர்டு, மாங்குப்பை, சாமிநாயக்கன்பட்டி, செல்லப்பிள்ளை குட்டை, வெத்தலைக்காரனூர், கோட்டகவுண்டம்பட்டி, பாகல்பட்டி, மாமாங்கம், சூரமங்கலம், ஜங்ஷன், மத்திய பேருந்து நிலையம், 5 ரோடு, குரங்குச்சாவடி, நரசோதிப்பட்டி, வெள்ளக்கல்பட்டி, பாரதி நகர், சீனிவாச நகர், ரெட்டியூர், நகரமலை அடிவாரம் ஆகிய பகுதிகளில் நாளை (ஜன.08) காலை 09.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை மின்விநியோகம் இருக்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மல்லியக்கரை துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால், மல்லியக்கரை, களரம்பட்டி, கருத்தராஜாபாளையம், ஆர்.என்.பாளையம், ஈச்சம்பட்டி, மத்துரூட்டு, சீலியம்பட்டி, வி.ஜி.புதூர், கீரிப்பட்டி, பூசாலியூர், கந்தசாமி புதூர், வி.பி.குட்டை, தலையூத்து, சிங்கிலியன்கோம்பை, அரசநத்தம், நாகப்பட்டினம், கோபாலபுரம் ஆகிய பகுதிகளில் நாளை (ஜன.09) காலை 09.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை மின்விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.
உடையாப்பட்டி துணை மின்நிலையத்தில் மின் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளவிருப்பதால், உடையாப்பட்டி, வரகம்பட்டி, அம்மாப்பேட்டை காலனி, கந்தாஸ்ரமம், வித்யா நகர், தாதம்பட்டி, காந்தி மைதானம், மேட்டுப்பட்டி, பொன்னம்மாப்பேட்டை, தாதனூர், தில்லை நகர், வீராணம் அயோத்தியாப்பட்டணம், குப்பனூர், வலசையூர் ஆகிய பகுதிகளில் நாளை (ஜன.09) காலை 09.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை மின்விநியோகம் இருக்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது


