ட்ரெண்டிங்

மீண்டும் உயரத் தொடங்கிய மேட்டூர் அணை நீர்மட்டம்!

நீர்வரத்து அதிகரித்ததை அடுத்து மேட்டூர் அணையின் நீர்மட்டம் இரண்டு நாட்களில் 4.67 அடி அளவிற்கு உயர்ந்துள்ளது. கிளை நதியான பாலாறு, தொப்பையாற்றில் நீர்வரத்து உயர்வால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

 

நீர்வரத்து அதிகரிப்பு காரணமாக, நேற்று முன்தினம் (அக்.11) 31.31 அடியாக இருந்த நீர்மட்டம் 35.98 அடியாக உயர்ந்துள்ளது.

 

இன்று (அக்.13) காலை 08.00 மணி நிலவரப்படி, மேட்டூர் அணைக்கான நீர்வரத்து வினாடிக்கு 18,974 கனஅடியில் இருந்து 15,606 கனஅடியாகக் குறைந்துள்ளது. அணையின் நீர்மட்டம் 33.10 அடியில் இருந்து 35.98 அடியாக உயர்ந்துள்ள நிலையில், நீர் இருப்பு 10.11 டி.எம்.சி.யாக உள்ளது. மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு இல்லை; குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 500 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

 

இதனிடையே, மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ள நிலையில், நீர்த்தேக்கப் பகுதியான பண்ணவாடி மற்றும் தருமபுரி மாவட்டம், நாகமரைக்கு இடையே மீண்டும் விசைப்படகு போக்குவரத்து தொடங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.