ட்ரெண்டிங்

வாரச்சந்தையில் கால்நடை விற்பனை மந்தம்.....வியாபாரிகள் கவலை!

வாரச்சந்தையில் கால்நடை விற்பனை மந்தம்.....வியாபாரிகள் கவலை!

 

மேட்டூர் அருகே வாரச்சந்தையில் கால்நடை விற்பனை இரண்டாவது வாரமாக சரிவடைந்ததால், வியாபாரிகள் ஏமாற்றமடைந்தனர்.

 

சேலம் மாவட்டம், மேட்டூர் அருகே உள்ள நங்கவள்ளி வாரச்சந்தைக்கு கால்நடை வரத்து அதிகரித்த போதிலும், புரட்டாசி மாதம் என்பதால், கால்நடைகளின் விற்பனை மந்தமாகவே இருந்தது. செம்மறி ஆடுகள், வெள்ளாடுகள் மற்றும் செம்மறி கிடாய்களை 10,000 முதல் 15,000 வரை விலைக் குறைத்து, நிர்ணயிக்கப்பட்ட போதும், விற்பனை பெரிதாக நடைபெறவில்லை.

 

கால்நடைச் சந்தையில் பல லட்சம் ரூபாய் வர்த்தகம் பாதித்துள்ளதால் வியாபாரிகள் கவலையடைந்துள்ளனர்.

எனினும், வரும் வாரங்களில் கால்நடைகளின் விற்பனை கணிசமாக அதிகரிக்கும் என்று வியாபாரிகள் நம்பிக்கைத் தெரிவித்துள்ளனர்.