ட்ரெண்டிங்

நீட் தேர்வு ரத்துச் செய்யப்படவில்லை- எடப்பாடி பழனிசாமி பேட்டி!

 

நீட் தேர்வு இன்னும் செய்யப்படவில்லை என்று தி.மு.க. அரசை அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.

 

சேலம் மாவட்டம், எடப்பாடி பயணியர் மாளிகையில் செய்தியாளர்களைச் சந்தித்த அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, "தி.மு.க. ஆட்சிக்கு வந்து இரண்டரை ஆண்டுகள் ஆகியும் நீட் தேர்வு இன்னும் ரத்துச் செய்யப்படவில்லை. தி.மு.க. மாநாட்டில் நீட் தேர்வு செய்ய வாங்கப்பட்ட கையெழுத்து பிரதிகள் அனைத்தும் குப்பை தொட்டில் வீசப்பட்டன.

 

தி.மு.க. நடத்திய இளைஞரணி மாநாட்டில் இருக்கைகள் காலியாக இருந்தன. நீட் தேர்வு ரத்துச் செய்யப்படும் என்று சொன்ன தி.மு.க. வாக்குறுதி என்ன ஆனது? இந்தியா கூட்டணியில் உள்ள கட்சிகள் இணைந்து செயல்படுவது இயலாத காரியம். தி.மு.க. இளைஞரணி மாநாட்டிற்கு வந்தவர்கள், மது அருந்திக் கொண்டு சூதாட்டத்தில் ஈடுபட்டனர்.

 

அ.தி.மு.க. ஆட்சியில் பல கோயில்கள் கட்டப்பட்டன; மசூதிகளை சீரமைக்க நிதி ஒதுக்கப்பட்டது. சாதி, மதத்திற்கு அப்பாற்பட்ட கட்சி அ.தி.மு.க." எனத் தெரிவித்துள்ளார்.