சினிமா

ஜி.வி.பிரகாஷுடன் நட்பு தொடரும்- சைந்தவி விளக்கம்! 

இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷுடன் நட்பு தொடரும் என்று அவரது முன்னாள் மனைவியும், பாடகியுமான சைந்தவி விளக்கம் அளித்துள்ளார். 

பிரபல இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் மற்றும் பாடகி சைந்தவி தம்பதி தங்கள் பரஸ்பரம் பிரிவதாக தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்திருந்தனர். இது திரையுலக வட்டாரத்தில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது. பல்வேறு தரப்பினரும் ஜி.வி.பிரகாஷ் விவகாரம் குறித்து விமர்சித்து வந்தனர். 

இந்த சூழலில், பாடகி சைந்தவி தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில், பள்ளி காலம் முதல் தொடர்ந்து 24 வருடங்கள் ஜி.வி.பிரகாஷுடன் நட்பு தொடர்கிறது; இனி வரும் காலங்களிலும் இருவருக்கிடையே நட்பு தொடரும். தனிப்பட்ட வாழ்க்கை குறித்து ஆதாரமற்ற வதந்திகளைப் பரப்புவது வேதனையாக உள்ளது. இருவரும் நன்கு ஆலோசித்து தான் விவாகரத்து முடிவு எடுத்தோம். ஜி.வி.பிரகாஷ் உடனான விவகாரம் குறித்து பரவிய வதந்திகளுக்குகண்டனம் தெரிவித்துக் கொள்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.