ட்ரெண்டிங்

எத்தனை தொகுதிகள் கொடுத்தாலும் பா. ஜ.க. கூட்டணியில் சேர மாட்டோம்- வேல்முருகன் எம்.எல்.ஏ.திட்டவ

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மாநில செயற்குழு கூட்டம், சேலம் ஏற்காட்டில் அக்கட்சியின் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான வேல்முருகன் தலைமையில் இன்று (அக்.08) காலை 11.00 மணிக்கு நடைபெற்றது. 

 

இந்த கூட்டத்தில், காவிரி நீர் விவகாரத்தில் தமிழர்களின் உரிமையை மீட்க வேண்டும், ஆறுகளில் புதிதாக மணல் குவாரிகளை அமைக்கும் முடிவை தமிழ்நாடு அரசு உடனடியாக கைவிட வேண்டும், கனிமவளக் கொள்ளையை தடுத்து நிறுத்த வேண்டும் உள்ளிட்ட 32 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 

 

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த வேல்முருகன்,தமிழக வாழ்வுரிமைக் கட்சிக்கு சீட்டும் நோட்டும் முக்கியமில்லை என்ற அவர் எத்தனை தொகுதிகள் கொடுத்தாலும் பா.ஜ.க. தலைமையிலான கூட்டணியில் சேர மாட்டோம். 

 

மேலும் தி.மு.க. கூட்டணியில் இதர கட்சிகளைக் காட்டிலும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி எதிலும் குறையவில்லை. தேர்தலில் சீட்டு கேட்பது எங்கள் உரிமை; வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஒரு சீட்டு கேட்க உள்ளோம். மேலும் மதச்சார்பற்ற கூட்டணியில் தற்போது வெற்றி பயணம் செய்கிறோம். எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற அ.தி.மு.க. முதலில் எங்களுடன் இணைந்து சிறிது காலம் பயணிக்கட்டும் அதன் பிறகு அ.தி.மு.க.வுடனான கூட்டணி குறித்து ஆலோசிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.