ட்ரெண்டிங்

ஊராட்சி மன்றத் தலைவர் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து நடந்த சிறப்புக் கூட்டம்!

சேலம் அருகே ஊராட்சி மன்றத் தலைவர் மீது நடவடிக்கை எடுக்கும் பொருட்டு, வட்டாட்சியர் தலைமையில் சிறப்பு கூட்டம் நடைபெற்றது.

சேலம் மாவட்டம், தேவியாக்குறிச்சி ஊராட்சி மன்றத் தலைவர் அமுதா, இவரது கணவர் மற்றும் ஊராட்சி மன்றச் செயலர் ஒப்பந்ததாரரிடம் கையூட்டு பெற்ற போது, லஞ்ச ஒழிப்புத்துறையால் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

 

இதனையடுத்து, அமுதா மீது நடவடிக்கை எடுக்கும் பொருட்டு, மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் அடிப்படையில், வட்டாட்சியர் தலைமையில் சிறப்பு கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், தங்களது கருத்துகளைத் தெரிவித்தனர்.

 

மேலும், இந்த கருத்துகள் மாவட்ட ஆட்சியரிடம் அறிக்கையாக சமர்ப்பிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.